உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூரில் நவ.,5 ல் சூரசம்ஹாரம்

திருச்செந்தூரில் நவ.,5 ல் சூரசம்ஹாரம்

துாத்துக்குடி: திருச்செந்துார் முருகன் கோயில் கந்த சஷ்டி விழாவின் ஐந்தாம் நாளான இன்று (நவ.,5) மாலை 4:30 மணிக்கு, பெருமான் சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.

அக்.,31 ல் யாகசாலை பூஜையுடன் துவங்கிய விழாவில், சூரசம்ஹாரத்தை முன்னிட்டு நவ.,4 இரவு 1மணிக்கு நடை திறக்கப்பட்டது. விஸ்வரூபம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. நவ.,5 காலை 7:00 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி யாகசாலை பூஜை நடக்கிறது. காலை 9:00 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், யாகசாலையில் மதியம் 12:00 மணிக்கு மகா தீபாராதனையும் நடக்கிறது. மதியம் 1:30 மணிக்கு சண்முக விலாசமண்டபத்திலும், 2:30 மணிக்கு சஷ்டி விரத மண்டபத்திலும் ஜெயந்திநாதர் எழுந்தருளி தீபாரதனை நடக்கிறது.

சூரசம்ஹாரம்: மாலை 4:30 மணிக்கு கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கஜமுகம், சிங்கமுகம், சுய உருவத்துடன் கூடிய சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது.மாலை 6:30 மணிக்கு சந்தோஷ மண்டபத்தில் ஜெயந்திநாதர் எழுந்தருளுவார். கோயில் வளாகத்தில் 108 மகாதேவர் சூரசம்ஹார நிகழ்ச்சியை காண இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், லண்டனில் இருந்து பக்தர்கள் வருவர். சன்னிதி முன் எழுந்தருளும் குமரவிடங்க பெருமானுக்கு சாயா அபிஷேகம் நடக்கிறது. அறநிலையத்துறை இணை கமிஷனர் வரதராஜன், தக்கார் கோட்டை மணிகண்டன், கோயில் நிர்வாகத்தினர் ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !