உடுமலை ஞானதண்டாயுதபாணி சுவாமி கோவிலில் திருக்கல்யாணம்
ADDED :3292 days ago
உடுமலை: உடுமலை அருகே பாப்பான்குளத்தில் ஞானதண்டாயுதபாணி சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் சூரசம்ஹார பெருவிழா கடந்த மாதம் 31ம் தேதி முதல் நவம்பர் 5ம் தேதி வரை நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கடந்த 5ம் தேதி மாலை நடைபெற்றது. விழாவின் நிறைவு நாளான நேற்றுமுன்தினம் மாலை, 6:00 மணிக்கு நடந்த திருக்கல்யாண உற்சவத்தில், சுற்றுப்பகுதி கிராமங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து திருக்கல்யாண கோலத்தில் சுவாமி திருவீதியுலாவும், ஊஞ்சலம் வசந்தவிழா, விடையாற்றி உற்சவமும் இடம் பெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை பாப்பான்குளம் ஞானதண்டாயுதபாணி நற்பணி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.