வீரராகவர் கோவிலில் பூதத்தாழ்வாருக்கு திருமஞ்சனம்
ADDED :3262 days ago
திருவள்ளூர் : திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், நேற்று, பூதத்தாழ்வாருக்கு திருமஞ்சனம் நடந்தது. பெருமாள் மீது, திருப்படிகம் பாடியோர் ஆழ்வார்கள் என, அழைக்கப்படுகின்றனர். திருவள்ளூர், வீரராகவ பெருமாள் கோவில், ஆண்டுக்கு ஒரு முறை, ஆழ்வார்களுக்கு சாற்று முறை மற்றும் திருமஞ்சனம் நடைபெறும். பூதத்தாழ்வாருடன் உற்சவர் வீரராகவரும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று, பூதத்தாழ்வார் சாற்றுமுறை திருமஞ்சனம் நடந்தது.மாலையில், மாட வீதி புறப்பாடு நடந்தது. இன்று, பேயாழ்வாருக்கு, காலை, 7:00 மணிக்கு, திருமஞ்சனமும், மாலை, 5:30 மணியளவில் மாடவீதி புறப்பாடும் நடக்கிறது.