உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இறைவனுக்கு உதவிய இரண்யன்!

இறைவனுக்கு உதவிய இரண்யன்!

கடவுள் எங்கிருக்கிறார்? என்றான் இரண்யன். தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார் என்றான் பிரகலாதன். அப்போதுதான் இறைவன் பயந்தார். நான்... நான் என்று எப்போதும் மார்தட்டும் இரண்யன் தனது நெஞ்சைத் தொட்டுக் காட்டி, என் நெஞ்சில் இறைவன் இருக்கிறானா? என்று கூறிவிட்டால் என்ன செய்வது? என்று நினைத்தே இறைவன் பயந்தார். காரணம், அவன் நெஞ்சில் அவர் புகுந்து விட்டால் அவன் பக்தனாகி விடுவான். பின் எப்படி அவனைக் கொல்ல முடியும்? நல்லவேளை! இரண்யன் ஒரு தூணைக் காட்டி இறைவனுக்கே உதவி செய்தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !