செஞ்சி சுந்தரவிநாயகர் கோவிலில் விஷ்ணு துர்கைக்கு பழ அலங்காரம்
ADDED :5315 days ago
செஞ்சி : செஞ்சி சுந்தரவிநாயகர் கோவில் விஷ்ணு துர்க்கைக்கு நவராத்திரியை முன்னிட்டு பழ அலங்காரம் செய்தனர். செஞ்சி சுந்தரவிநாயகர் கோவிலில் கடந்த 28ம் தேதி முதல் நவராத்திரி விழா நடந்து வருகிறது. இதை முன்னிட்டு சுந்தரவிநாயகர், முருகப்பெருமான், விஷ்ணு துர்க்கைக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து வருகின்றனர். கடந்த 4ம் தேதியன்று 7ம் நாள் விழாவாக திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் விஷ்ணு துர்க் கைக்கு பழ அலங்காரம் செய்தனர்.