உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரியில் சரஸ்வதி பூஜை கோலாகலம்

தர்மபுரியில் சரஸ்வதி பூஜை கோலாகலம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று சரஸ்வதி பூஜை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தர்மபுரி மாவட்டத்தில் நேற்று சரஸ்வதி பூஜையையொட்டி வீடுகளிலும், கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. பூஜையொட்டி நேற்று முன்தினம் முதல் கடை வீதிகளில் பூஜை பொருட்கள் பொரி, வாழை மரங்கள், திருஷ்டி பூசணிக்காய் உள்ளிட்டவைகள் விற்பனை அமோகமாக நடந்தது. வணிக நிறுவனங்களிலும் நேற்று மாலை முதல் சரஸ்வதி பூஜைகள் நடந்தது. தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் பூஜைகளில் கலந்து கொண்டனர். இன்றும் பெரிய தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஆயுத பூஜைகள் நடக்கிறது. வீடுகளில் ஏடுகள் அடுக்கி சரஸ்வதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். இதையொட்டி இரு சக்கர வாகனங்கள், சைக்கிள் உள்ளிட்டவைகளை சுத்தம் செய்தும், வாட்டர் சர்வீஸ் செய்தும், வாகனங்களுக்கு மாலை அணிவித்து பலரும் வழிபட்டனர். தர்மபுரி கோட்டை கோவில், எஸ்.வி.ரோடு சாலை விநாயகர் கோவில், நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில் உள்ளிட்ட இடங்களில் ஸ்வாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பல வீடுகளில் நவராத்திரி கொலு பொம்மைகள் வைத்து அம்மனுக்கு காலை மற்றும் மாலையில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். நேற்று அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை என்பதால், திறந்திருந்த பல வர்த்தக நிறுவனங்களில் மாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மாலையில் இருந்து விடுமுறை விடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !