உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாரதாம்பாள் கோவிலில் மகா சண்டி ஹோமம்

சாரதாம்பாள் கோவிலில் மகா சண்டி ஹோமம்

புதுச்சேரி : நவராத்திரி விழாவை முன்னிட்டு சிருங்கேரி சிவகங்கா மடத்தில் மகா சண்டி ஹோமம் நடந்தது. சிருங்கேரி சிவகங்கா மடத்தின் சார்பில் 37வது நவராத்திரி விழா நூறடி ரோடு சாரதாம்பாள் கோவிலில் கடந்த மாதம் 28ம் தேதியிலிருந்து நடந்து வருகிறது. ஆயுத பூஜையான நேற்று காலை உலக நலனுக்காகவும், உலக சமாதானத்திற்காகவும் மகா சண்டி ஹோமம் நடந்தது. இதில் புதுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிருங்கேரி சிவகங்கா மடத்தின் தலைவர் ராதாகிருஷ்ணன், செயலாளர் ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !