உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / லஷ்மி ஹயக்கிரீவர் கோவிலில் இன்று வித்யா ஆரம்பம் நிகழ்ச்சி!

லஷ்மி ஹயக்கிரீவர் கோவிலில் இன்று வித்யா ஆரம்பம் நிகழ்ச்சி!

புதுச்சேரி : லஷ்மி ஹயக்கிரீவர் கோவிலில் "வித்யா ஆரம்பம் நிகழ்ச்சி இன்று நடக்கிறது. முத்தியால்பேட்டை, ராமகிருஷ்ணா நகரில் லஷ்மி ஹயக்கிரீவர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் விஜயதசமியன்று "வித்யா ஆரம்பம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்வது வழக்கம். இன்று, "வித்யா ஆரம்பம் நிகழ்ச்சி, காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை நடக்கிறது. பள்ளியில் புதிதாக சேரும் தங்களது குழந்தையின் கையை பெற்றோர்கள் பிடித்து, சுவாமியின் முன் பரப்பப்படும் நெல்லில் "அ... ஆ... என எழுதுவதே "வித்யா ஆரம்பம் நிகழ்ச்சியாகும். இதன்மூலம் குழந்தைகள், சிறந்த கல்வி அறிவு பெறுவர் என்பது ஐதீகமாகும். சரஸ்வதிக்கு, லட்சுமி ஹயக்கிரீவர் ஞான உபதேசம் செய்தது விஜயதசமி தினத்தில் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, விஜயதசமியன்று குழந்தைகள் நல்ல முறையில் கல்விக் கற்பதற்காக "வித்யா ஆரம்பம் நிகழ்ச்சிக்கு லஷ்மி ஹயக்கிரீவர் கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !