உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூதத்தாழ்வார் அவதார உற்சவம் நிறைவு

பூதத்தாழ்வார் அவதார உற்சவம் நிறைவு

மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், பூதத்தாழ்வார் அவதார உற்சவம் நிறைவடைந்தது. மாமல்லபுரம், ஸ்தலசயன பெருமாள் கோவிலில், 30ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் வரை, பூதத்தாழ்வார் அவதார உற்சவம் நடைபெற்றது. இறுதி நாளில் காலை, ஸ்தலசயன பெருமாள், நிலமங்கை தாயார், ஆண்டாள், ராமர், லட்சுமி நரசிம்மர் ஆகியோர், பூதத்தாழ்வாருக்கு மரியாதை அளித்து, இரண்டாம் திருவந்தாதி பாடப்பட்டது. அதைத்தொடர்ந்து, ஆதிவராக பெருமாள் கோவில் சென்று, அவரிடமும் மரியாதை பெற்று, வீதியுலா சென்று, தான் அவதரித்த நந்தவன மண்டபத்தில் எழுந்தருளினார். மாலை, கோவிலில், பெருமாள், தாயார், பூதத்தாழ்வார் ஆகியோருக்கு, திருமஞ்சனம் நடைபெற்று, இரவு, தேவியருடன் பெருமாள், பூதத்தாழ்வார் ஆகியோர், வீதியுலா சென்றனர். கோவில் திரும்பியதும், கும்பகோணம் சாரங்கபாணி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவிடந்தை நித்யகல்யாண பெருமாள் ஆகிய கோவில்களிலிருந்து, பூதத்தாழ்வாருக்கு மரியாதை அளிக்கப்பட்டு, உற்சவம் நிறைவடைந்தது. நேற்று விடையாற்றி உற்சவம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !