திருக்கழுக்குன்றம் சொக்கம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா!
ADDED :3286 days ago
திருக்கழுக்குன்றம்: சொக்கம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலின் உபகோவில்களில் ஒன்றான திருமலை சொக்கம்மன் கோவில், கிரிவல பாதையில் உள்ளது. இக்கோவிலின் மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவை ஒட்டி, மூலவர் சொக்கம்மன் மற்றும் உற்சவருக்கு அபிேஷக ஆராதனை முத்தங்கி சேவையும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பார்வதி திருக்கல்யாண மகோற்சவ அலங்கார சேவையும் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து கிரிவலம் வந்தனர். விழாவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர் தியாகராஜன் மற்றும் கோவில் அர்ச்சகர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.