உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூலாநந்தீஸ்வரருக்கு இன்று அன்னாபிஷேகம்

பூலாநந்தீஸ்வரருக்கு இன்று அன்னாபிஷேகம்

சின்னமனுார்: சின்னமனுார் சிவகாமியம்மன் கோயிலில், மூலவர் பூலாநந்தீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் இன்று மாலை 4 மணிக்கு மேல் நடக்கிறது. சின்னமனுாரில் 6கால பூஜை நடைபெறும் பிரசித்தி பெற்ற சிவகாமியம்மன் கோயிலில் சுயம்பு மூலவரான பூலாநந்தீஸ்வரருக்கு ஆண்டுக்கு ஒருமுறை அன்னாபிஷேகம் நடைபெறும். தீபாவளிக்கு அடுத்து வரும் பவுர்ணமி நாளில் அறுவடை செய்த புது நெல் அரிசியில் சமைத்த சாதத்தில் மூலவருக்கு அலங்காரம் செய்யப்படும். அலங்காரம் களையும் போது கிடைக்கும் பிரசாதத்தின் சரிபாதி சுரபி நதியில் மங்கள வாத்தியம் முழுங்க கரைக்கப்படும். மீதி உள்ளவற்றை பக்தர்களுக்கு வழங்குவார்கள்.

மூலவருக்கு அன்னாபிஷேகம்: தெய்வீகப்பேரவையினர் கூறுகையில், ஆண்டு முழுவதும் மூலவருக்கு நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கிடைக்கும் ஆன்மிக சக்தி, அன்னாபிஷேகத்தின் போது வெளிப்படும். இதை பிரசாதமாக சாப்பிடும் போது குழந்தை பேரில்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். நாட்டில் அமைதி நிலவவும், பருவமழை பொய்க்காமல் பெய்திடவும் மூலவருக்கு நவ., 14ல் அன்னத்தால் அலங்காரம் செய்யப்படுகிறது, என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !