திருக்கண்ணீஸ்வரர் கோயிலில் பிரதோஷ பூஜை
ADDED :3439 days ago
தளவாய்புரம்: சேத்துார் திருக்கண்ணீஸ்வரர் கோயிலில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு 21 வகையான அபிஷேகங்கள், சிறப்புஅலங்காரம், ஆராதனை நடந்தன. சுற்று பகுதிகளிலிருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திருந்தனர். தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயிலில் சனிப்பிரதோஷம் நடந்தது.நந்திக்கு பல்வேறு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தது.திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
*சொக்கநாதன்புத்துார் தவநந்தி கண்டேஸ்வரர் கோயிலில் சனிபிரதோஷ பூஜை நடந்தது.நந்நிதிக்கு பல்வேறு அபிஷேகங்களும்,சிறப்பு ஆராதனையும் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிப்பட்டனர். அன்னதானம் நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.