உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வகணபதி கோவில் இன்று கும்பாபிஷேகம்

செல்வகணபதி கோவில் இன்று கும்பாபிஷேகம்

நாமக்கல்: ராமாபுரம்புதூர் அன்புநகர்-3ல், செல்வகணபதி கோவில் கும்பாபிஷேக விழா, இன்று (நவ., 14) கோலாகலமாக நடக்கிறது. நாமக்கல் நகராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம்புதூர் அன்புநகர், 3ல், செல்வகணபதி கோவில், திருப்பணி மிகுந்த பொருட்செலவில் மேற்கொள்ளப்பட்டது. திருப்பணிகள் அனைத்து முடிந்ததை தொடர்ந்து, இன்று (நவ., 14) வெகுவிமரிசையாக கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவை முன்னிட்டு, இன்று அதிகாலை, 5:35 மணிக்கு, மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், ஊர் மக்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !