முத்துவேடியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :3288 days ago
தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே, அதிகாரிப்பட்டி சின்னேரி வேடியப்பன் சுவாமி முத்துவேடியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (நவ.,14) நடக்கிறது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, நேற்று காலை, 9:00 மணிக்கு கணபதி பூஜை, கணபதி ஹோமம் நடந்தது. மாலை, 4.:00 மணிக்கு பக்தர்கள் தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து வந்தனர். இரவு, 11:00 மணிக்கு கோபுர கலச பூஜை, தீபாராதனை நடந்தது. இன்று காலை, 9:00 மணிக்கு மேல் சின்னேரி வேடியப்பன் சுவாமி, முத்துவேடியம்மன் சுவாமி கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. 10:00 மணிக்கு தீபாராதனை நடக்கிறது. கும்பாபிஷேகத்தை காந்தி பட்டாச்சாரியார் நடத்துகிறார். ஏற்பாடுகளை கோவில் பூசாரிகள் பரமசிவம், பழனி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் செய்து வருகின்றனர்.