உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்தரகோசமங்கையில் அன்னாபிஷேகம்

உத்தரகோசமங்கையில் அன்னாபிஷேகம்

கீழக்கரை: ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட உத்தரகோசமங்கை மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி அம்மன் கோயிலில் ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு மூலவருக்கு அன்னாபிஷேக விழா நடந்தது. காலை 11 மணிக்கு 18 வகையான மூலிகை அபிஷேகம் செய்யப்பட்டது. 51 படி அரிசியில் சாதம் வடிக்கப்பட்டு மங்களநாதர் மீது அன்னம் சாற்றப்பட்டது. காய்கறிகள், பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிவ சகஸ்ரநாம அர்ச்சனை, நாமஜெபம், பாராயணம் நடந்தது. மாலை 5 மணிக்கு திருமேனியில் சாற்றப்பட்ட சோறு கோயில் அக்னி தீர்த்த தெப்பக்குளத்தில் மீன்களுக்கு இரையாக வழங்கப்பட்டது. பின், வீதியுலா புறப்பாடு நடந்தது. ஆண்டு முழுவதும் உணவு பற்றாக்குறை ஏற்படாமலும், விவசாயம் செழிக்கவும் இவ்விழா ஆண்டிற்கு ஒருமுறை நடக்கிறது. ஏற்பாடுகளை சமஸ்தான திவான் மகேந்திரன், செயல் அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் சுப்பையா செய்திருந்தனர்.*திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் அன்னாபிஷேகம் நடந்தது. மாலையில் சிநேகவல்லி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !