முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு யாகபூஜை
ADDED :3296 days ago
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட பூஜாரிகள் பேரமைப்பு சார்பில் பாரதிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் சிறப்பு யாகபூஜை நடந்தது. மாவட்ட தலைவர் உதயகுமார் சிவாச்சாரியார் நடத்தி வைத்தார். ஏற்பாடுகளை பொறுப்பாளர் சங்கர்பூஜாரி செய்திருந்தார். மாவட்ட நிர்வாகிகள் செந்தில்குமார், பிச்சை, பிரவின் பங்கேற்றனர். சுமங்கலி பூஜை, மாணவர்களுக்கான சிறப்பு பூஜைகள், சூலாயுதம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முடிவில் சிவபுராணம் புத்தகம் வழங்கப்பட்டது. அன்னதானம் நடந்தது.