உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதபுரம் ஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்

ராமநாதபுரம் ஐயப்ப பக்தர்கள் விரதம் துவக்கம்

ராமநாதபுரம் : சபரிமலைக்கு ஆன்மிக பயணம் செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து விரதம் துவக்குவது வழக்கம். நேற்று கார்த்திகை முதல் நாள் என்பதால் கோயில்களில் ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கினர். ராமநாதபுரம் காட்டுப்பிள்ளையார் கோயில், பேரக்கண்மாய் ஆஞ்ச நேயர் கோயில், உச்சிப்புளி ஸ்ரீதர்ம சாஸ்தா, மண்டபம் ஐயப்பன் கோயில்களில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் குருசாமி முன்னிலையில் மாலை அணிந்தனர். முன்னதாக காலை 5:00 மணி முதல் கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. இக்கோயில்களில் டிச., 16ல் மார்கழி பøனை, டிச., 26ல் மண்டலாபிஷேகம் நடக்கிறது.

* ரெகுநாதபுரம் வல்லபை ஐயப்பன் கோயிலில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலையணிந்து விரதம் துவக்கினர். முன்னதாக காலை 5:00 மணி முதல் கணபதி ஹோமம், அஷ்டாபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வல்லபை விநாயகர், ஐயப்பன், மஞ்சமாதா சன்னதிகளில் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கினர். குருசாமி மோகன் மாலை அணிவித்தார்.

அவர் கூறுகையில், “ வல்லபை ஐயப்பன் கோயிலில் அடுத்த ஆண்டு தங்க கொடி மரம் பிரதிஷ்டை செய்யப்படும். கருங்கல்லால் ஆன ஐயப்பன் மூலஸ்தான திருப்பணிகள் நடந்து வருகிறது. கார்த்திகை 1 முதல் 48 நாட்களும் இரவு பஜனை, கூட்டுப்பிரார்த்தனை, அன்னதானம் நடைபெறும், என்றார்.

* ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் விநாயகர் சன்னதி முன்பு ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் துவக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !