உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆற்றில் வெள்ளம் வர வேண்டி கிடாவெட்டி கிராமமக்கள் பூஜை

ஆற்றில் வெள்ளம் வர வேண்டி கிடாவெட்டி கிராமமக்கள் பூஜை

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே முறையூர் பாலாற்றில் வெள்ளம் வர வேண்டி கிராம மக்கள் கிடா வெட்டி பூஜை செய்தனர். இக்கிராமம் அருகே பாலாற்றில் அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் 2005 ல் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதே ஆண்டில் புதிய பாலம் கட்டப்பட்டது. அதன்பின் அந்த ஆற்றில் பெரிய அளவில் தண்ணீர் வரவில்லை. இதனால் கடந்த ஆண்டு முதல் வெள்ளம் வர வேண்டி பாலத்தின் அடியில் கிராம மக்கள் கிடா வெட்டி பூஜை செய்து வருகின்றனர் அதன்படி நேற்று பாலாற்று கருப்பருக்கு பூஜை செய்து 2 ஆடுகளை பலிகொடுத்தனர். சிறப்பு வழிபாடும் நடந்தது. இரண்டாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கிராமமக்கள் கூறுகையில், ’ஆற்றில் தண்ணீர் வராததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறப்பு பூஜை செய்தால் பாலாற்றில் வெள்ளம் வரும்; அதன்மூலம் விவசாயம் தழைக்கும் என நம்புகிறோம்,’ என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !