ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் மழை வேண்டி மகாருத்ர பூஜை
ADDED :3328 days ago
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே கொளத்தூர் கிராமத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவிலில், உலக நன்மை வேண்டி, மஹாருத்ர பூஜை நேற்று முன்தினம் இரவு நடந்தது. கோவில் விழாக்குழு தலைவர் சரவணன் தலைமை வகித்தார். வாழும் கலை அமைப்பின் சுரேஷ் ஜி பங்கேற்று, உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், சிறப்பு மஹாருத்ர பூஜை செய்தார். தொடர்ந்து, தமிழ் திருமுறை, பக்தி பஜனை பாடல்கள் பாடப்பட்டது. இதில் கொளத்தூர், ஈடியார் தோப்பு, குப்பம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.