உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தரமகாலிங்கசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா

சுந்தரமகாலிங்கசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா

வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு மந்தித்தோப்பில் சுந்தரமகாலிங்கசுவாமி கோயில் கும்பாபிஷேக விழா நடந்தது. கணபதி ஹோமத்துடன் முதல்நாள் யாகபூஜைகள் துவங்கின. மகாலட்சுமி ஹோமம் உள்ளிட்ட பல்வகை ஹோமங்கள், அங்குரார்ப்பணமும், கும்பஸ்தாபனம் நடந்தன. 2ம் நாள் கோபூஜைகள், யந்திரஸ்தாபனம் நடந்தது. மூன்றாம் நாளில் கடம் புறப்பாடு நடந்தது. இதில் யாகபூஜையில் பூஜிக்கப்பட்ட கும்பநீரை சாமிநாதப்பட்டர் தலைமையிலான சிவாச்சார்யார்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கோபுர கலசம், சுவாமிக்கு அபிஷேகம் செய்தனர். பின்னர் சர்வ அலங்காரத்துடன் மூலஸ்தானத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், திருமுறை பாராயண வழிபாடு நடந்தன. மோகன் குழுவினரின் பக்தி இன்னிசை கச்சேரி, பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தன. சுந்தரமகாலிங்கம் கோயில் டாக்டர்கள் ஹேமா சுஜாதா, நிர்மலா, பக்தர்குழுவினர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !