உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி கோவிலில் இ - உண்டியல்: காணிக்கை செலுத்த கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தலாம்!

பழநி கோவிலில் இ - உண்டியல்: காணிக்கை செலுத்த கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தலாம்!

பழநி: ஸ்ரீரங்கம் கோவிலை தொடர்ந்து, பழநி முருகன் கோவிலிலும், இ - உண்டியல் வைக்கும் பணி நடக்கிறது. பழநி மலைக் கோவிலில், 20 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல்கள் திறக்கப்படும். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகிறது. தற்போது கிரெடிட், டெபிட் கார்டுகள் வாயிலாக பக்தர்கள், காணிக்கை செலுத்தும் வகையில் மேற்கு வெளிப்பிரகாரத்தில், எஸ்.பி.ஐ., வங்கி சார்பில், ’டிபாசிட்’ இயந்திரமான, இ - உண்டியல் வைக்கும் பணி நடக்கிறது. கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், ’பக்தர்கள், ’டிபாசிட்’ இயந்திரத்தில் கிரெடிட், டெபிட் கார்டுகளை பயன்படுத்தி காணிக்கை செலுத்தலாம். வழக்கம் போல், ரூபாய் நோட்டுகளையும் செலுத்தலாம். ’அவை, நேரடியாக கோவில் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். விரைவில், பயன்பாட்டிற்கு வர உள்ளது’ என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !