முதல்வர் நலம்பெற வேண்டி கோவில்களில் சிறப்பு யாகம்
ADDED :3283 days ago
கிருஷ்ணகிரி: தமிழக முதல்வர் பூரண நலம் பெற வேண்டி, கிருஷ்ணகிரி அடுத்த ஆவல்நத்தம் காசீஸ்வர பசவேஸ்வர கோவிலில், மாவட்ட அ.தி.மு.க., சார்பில் சிறப்பு யாகம் நடந்தது. மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். யாகத்தில், முன்னாள் மாவட்ட செயலாளர்கள் காத்தவராயன், முனிவெங்கடப்பன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
* திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், முதல்வர் நலம் பெற வேண்டி, தெற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் ராஜன் தலைமையில், சிறப்பு யாகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. இதில், எம்.எல்.ஏ., பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் ராமசந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.