அய்யர்மலை கோவில் சோமாவார தரிசனம்
ADDED :3283 days ago
குளித்தலை: அய்யர்மலை ரத்தனகிரீஸ்வரர் கோவில், சோமாவாரம் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. குளித்தலை அடுத்த அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் மலைக்கோவிலில், கார்த்திகை திங்கள் கிழமை தோறும், சோமாவாரம் கொண்டாடுவது வழக்கம். நேற்று முதல் திங்கள் என்பதால், அதிகாலையில் இருந்து பகத்தர்கள் மலை ஏறி சுவாமி தரிசனம் செய்தனர். சோமாவாரம் நிகழ்ச்சியில், தங்கள் விளை நிலத்தில் பயிரிட்ட நெல், கடலை, பருப்பு வகைகளை, பொன்னிடும் பாறையில் போட்டு தரிசனம் செய்தனர். மேலும், ஐயப்ப சுவாமி பக்தர்கள், குளித்தலை, தோகைமலை, பஞ்சபட்டி பகுதிமக்கள், மலையில் உள்ள, 1,018 படிகள் ஏறி சுவாமியை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, இ.ஓ., ஜெயகுமார், தக்கார் ரத்தினவேல் பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.