குளித்தலை கோவில்களில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு தரிசனம்
ADDED :3356 days ago
குளித்தலை: கடம்பர்கோவில் மற்றும் ஆர்.டி.மலை கோவில்களில், தேய்பிறை அஷ்டமி சிறப்பு பூஜைகள் நடந்தன. குளித்தலை அடுத்த கடம்பர்கோவிலில், நேற்று தேய்பிறை அஸ்டமியை முன்னிட்டு, காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதேபோல், ஆர்.டி.மலையில் உள்ள பெரியநாயகி அம்பாள் சமேத விராச்சிலேஸ்வரர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், ஆர்.டி.மலை மற்றும் கடம்பர்கோவில் பகுதி பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.