வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3283 days ago
திருப்பூர்: பல்லடம் அருகே மலையப்பாளையம் ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, நடைபெற்றது. பூமலுõர் ஊராட்சி, மலையப் பாளையத்தில் ஸ்ரீ வரசித்தி விநாயகர், ஸ்ரீ கருப்பண்ணசாமி, ஸ்ரீ கன்னிமார் கோவில் மகா கும்பாபிஷேக விழா கணபதி ஹோமத்துடன் துவங்கிய து. 22ல் முளைப்பாலிகை ஊர்வலம் நடந்தது. நேற்று காலை, 9:00 மணிக்கு மேல், விமான கோபுர கும்பாபிஷேகம், பரிவாரம் கும்பாபிஷேகம், மூலஸ்தான விநாயகர் கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, அலங்காரம், தசதரிசனம், தீபாராதனை நடந்தது. மலைகோவில் சின்ன மண்டபத்தில் அன்னதானம் நடந்தது. மலையப்பாளையம் மற்றும் அருகிலுள்ள பகுதியை சேர்ந்த பக்தர்கள் பங்கேற்றனர்.