சபரிமலையில் அறைகள் ஆன்லைனில் முன்பதிவு
ADDED :3346 days ago
சபரிமலை: சபரிமலையில் தங்குவதற்கு, ஆன்லைனில் அறைகள் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது. சபரிமலை வரும் பக்தர்கள் தங்குவதற்கு, தேவசம் போர்டு அறைகள் மட்டுமே உள்ளன. பல்வேறு கட்டடங்களில், 600 அறைகள் உள்ளன. தனியார் கட்டடங்கள் இங்கு கிடையாது. சபரிமலை சன்னிதானத்தின் இடதுபுறம், அறைகள் ஒதுக்கீடுக்கான அலுவலகம் செயல்படுகிறது. பக்தர்கள் நேரடியாக சென்று முன்பதிவு செய்யலாம். சில ஆண்டுகளுக்கு முன், மாலை, 4:00 மணிக்கு நடை திறந்த பின்னரே, அறைகள் வழங்கப்பட்டு வந்தன. தற்போது, அறைகள் காலியாக இருந்தால், எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ள முடியும். ஆன்லைன் வழியாக, அறைகள் முன்பதிவு செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது. www.sabarimalaaccomodation.com.