உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசாணியம்மன் கோவில் உண்டியலில் ரூ.8.75 லட்சம் செல்லாத நோட்டுகள்

மாசாணியம்மன் கோவில் உண்டியலில் ரூ.8.75 லட்சம் செல்லாத நோட்டுகள்

பொள்ளாச்சி: மாசாணியம்மன் கோவில் உண்டியலில், 8.75 லட்சம் ரூபாய்க்கு,  செல்லாத ரூபாய் நோட்டுகள் இருந்தன. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின் உண்டியல் எண்ணிக்கை, நேற்று முன்தினம் நடந்தது. கோவிலுள்ள, 16 பிரதான உண்டியல்களில், 26.88 லட்சம் ரூபாய் வசூலாகி இருந்தது. இதில், புதிய, 2,000 நோட்டுகள், 22 இருந்தன. செல்லாத ரூபாய் நோட்டுகள்,   8.75 லட்சம் ரூபாய் இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !