துவங்கியது சவேரியார் ஆலய விழா: டிச. 3ல் தேர்ப்பவனி!
ADDED :3342 days ago
விருதுநகர்: விருதுநகர் பாண்டியன்நகர் துாயசவேரியார் ஆலய விழா கொடியேற்றத்துடன் நேற்று மாலை துவங்கியது. மதுரை உயர்மறை மாவட்ட பொருளாளர் ஆரோக்கியம் கொடியேற்ற சவேரியார் நகர் பாதிரியார் ஆரோக்கிய செல்வம், எஸ்.எப்.எஸ். மெட்ரிக்., மேல்நிலை பள்ளி தாளாளர் மைக்கேல், முதல்வர் பிரிட்டோ, பொருளாளர் அந்தோணி ராஜ் முன்னிலை வகித்தனர். இதை தொடர்ந்து சிறப்பு திருப்பலி, அறிவிப்பு முன்னறிவிப்பு என்ற தலைப்பில் உரை நடந்தது. விழாவை முன்னிட்டு தினமும் மாலையில் நவநாள் திருப்பலி, மறையுரை நடக்கிறது. டிசம்பர் 3 மாலை 6 மணிக்கு தேர்ப்பவனி நடக்க உள்ளது. 4ல் கொடியிறக்கத்துடன் விழா முடிவடைகிறது. ஏற்பாடுகளை சவேரியார் நகர் பாதிரியார் ஆரோக்கிய செல்வம் செய்திருந்தார்.