வாணீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED :3270 days ago
அரூர்: அரூர் சந்தைமேட்டில் எழுந்தருளியுள்ள வாணீஸ்வரி அம்பாள் உடனுறை வாணீஸ்வரர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, வரும், 30ல் கோபூஜையுடன் துவங்குகிறது. டிச., 1ல் சாந்தி ஹோமம், 2ல் கால யாகசாலை பூஜை நடக்கிறது. 3ல் காலசந்தி பூஜை, தீபாராதனையும், 4ல் விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகமும் நடக்க உள்ளது.