முதல்வர் நலம் பெற வேண்டி 1,008 பால்குட ஊர்வலம்
ADDED :3270 days ago
பாப்பிரெட்டிப்பட்டி: தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் பூரண குணமடைய வேண்டி, பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ., பழனியப்பன் தலைமையில், 1,008 பெண்கள் பால் குடம் ஊர்வலம் எடுத்து சென்று, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தனர். பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த நடூரிலிருந்து, 1,008 பெண்கள் பால்குடத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்று, பி.துறிஞ்சிப்பட்டியில் உள்ள பட்டாளம்மன் கோவிலில் அம்மனுக்கு அபி?ஷகம் செய்தனர். பின் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. இதையடுத்து, ஆதிபராசக்தி குழுவினர், 1,008 மந்திரங்கள் மூலம் சிறப்பு வழிபாடு செய்தனர்.