தீ குண்டத்தில் இறங்கி ஐயப்ப பக்தர்கள் வழிபாடு
ADDED :3339 days ago
கிருஷ்ணராயபுரம்: பழையஜெயங்கொண்டம் அடுத்த அழகாபுரி பகுதியில் உள்ள பாம்பலம்மன் கோவில் முன், சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும் பக்தர்கள், தீக் குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த பழைய ஜெயங்கொண்டம், அழகாபுரி பகுதியில், பாம்பலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் திடலில், தீக் குண்டம் உருவாக்கப்பட்டு, அந்த குண்டத்தில் சபரி மலை ஐயப்பன் கோவில் செல்லும் பக்தர்கள், நேற்று முன்தினம் இரவு, 8:15 மணியளவில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை அழகாபுரி சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.