காரமடையில் குரு பூஜை விழா
ADDED :3571 days ago
கன்னிவாடி: தருமத்துப்பட்டி அருகே காரமடையில், ராமலிங்கசுவாமிகள் அன்னதான மடம் உள்ளது. தைப்பூசம், பங்குனி உத்திர பாதயாத்திரை, கோடைகாலங்களில் சேவைநோக்குடன் தண்ணீர் பந்தல், அன்னதான விழா நடக்கும். ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் குருபூஜை நடப்பது வழக்கம். நேற்று குருபூஜையை முன்னிட்டு, சுவாமிக்கு தீர்த்தாபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவை முன்னிட்டு அன்னதானம், ஆன்மிக சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.