உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொன்னியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

பொன்னியம்மன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

மொளச்சூர்: மொளச்சூர் பொன்னியம்மன் கோவிலில், மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் ஊராட்சி, மொளச்சூர் கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் உள்ளது. பழமையான இந்த கோவில் அண்மையில் புனரமைக்கப்பட்டது. மேலும், இந்த கோவிலின் கோபுரம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் ஆகியவை புதிதாய் அமைக்கப்பட்டன. இதை அடுத்து கணபதி ஹோமம், கோ பூஜை, யாக கால பூஜைகள் செய்யப்பட்டு நேற்று முன்தினம் காலை கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு, மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !