திருப்பந்தியூர் லட்சுமி குபேரருக்கு வரும் 4ல் மகா சம்ப்ரோக் ஷணம்
திருப்பந்தியூர்: திருப்பந்தியூர் பஞ்சமுக ஆஞ்சனேயர் கோவிலில் உள்ள லட்சுமி குபேரருக்கு, வரும் 4ம் தேதி, மகா சம்ப்ரோக் ஷணம் நடைபெறுகிறது. கடம்பத்துார் ஒன்றியம், திருப்பந்தியூரில் அமைந்துள்ளது பஞ்சமுக ஆஞ்சனேயர் கோவில். இந்த கோவில் வளாகத்தில் மகா மண்டபமும், லட்சுமி குபேரர் கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் சம்ப்ரோக் ஷணம், வரும் 4ம் தேதி நடைபெற உள்ளது. முன்னதாக, 3ம் தேதி, காலை 7:00 மணிக்கு, லட்சுமி குபேரர், விமான கலசம் கரிக்கோலமும் அதை தொடர்ந்து, காலை 10:00 மணிக்கு விமான கலச பிரதிஷ்டை மற்றும் திரிபந்தனம் சாற்றுதலும் நடைபெறும். பின், மாலை 5:00 மணிக்கு, புற்றுமண் எடுத்து வருதல், அங்குரார்பணம், அக்னி பிரதிஷ்டை மற்றும் பூர்ணாஹூதியும் நடைபெறும். பின், மறுநாள் 4ம் தேதி, காலை 7:00 மணிக்கு, விஸ்வரூப புண்யாஹவாசணம் கும்பராதணமும், மூர்த்திஹோமங்களும், காலை 8:45 மணிக்கு மகா பூர்ணாஹூதியும் நடைபெறும். பின், காலை 9:00 மணிக்கு லட்சுமி குபேரருக்கு மகா சம்ப்ரோக் ஷணம் நடைபெறும்.