மாரியம்மனுக்கு கலச பூஜை விழா பக்தர்களுக்கு அழைப்பு
ADDED :3251 days ago
ராசிபுரம்: ராசிபுரம், மாரியம்மன் கோவிலில், 1,008 கலச பூஜை விழா நடக்கிறது. ராசிபுரம் மாரியம்மன், செல்லாண்டியம்மன், ஆஞ்சநேயர் கோவிலில், ஒன்பதாம் ஆண்டு, 1,008 கலச பூஜை விழா, வரும், 11ல் நடக்கிறது. அன்று காலை, 9:00 மணிக்கு, கணபதி ஹோமம், மதியம், 1:30 மணிக்கு மாரியம்மனுக்கு அபிஷேகமும் நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு, அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் மாரியம்மன் எழுந்தருளவுள்ளார். தொடர்ந்து, 1,008 கலச பூஜை நடக்கிறது. ஒரு குடம், ஒரு டம்ளர், ஒரு ஸ்பூன், பூஜை பொருட்களாக எடுத்து வர, பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்பவர்கள், கோவில் அர்ச்சகரிடம் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளும்படி, செயல் அலுவலர் சுரேஷ்குமார் தெரிவித்துள்ளார்.