ராசிபுரம் கைலாசநாதர் கோவிலில் சிறப்பு பூஜை
ADDED :3250 days ago
ராசிபுரம்: ராசிபுரம், கைலாசநாதர் கோவிலில், கார்த்திகை மாதம் இரண்டாவது சோமவார தினத்தை முன்னிட்டு, லட்சார்ச்சனை ஹோமம் பூஜை நேற்று சிறப்பாக நடந்தது. காலை, 6:00 மணிக்கு, விநாயகர் பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து லட்சார்ச்சனை பூஜை விழா நடந்தது. மாலை, 4:00 மணிக்கு, சிறப்பு பூஜைகள், அபிஷேக, ஆராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, நிறைவு விழா, மஹா தீபாராதனை நடந்தது. சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.