முதல்வர் நலம் பெற சிறப்பு தொழுகை
ADDED :3249 days ago
ஓசூர்: ஓசூர், தேன்கனிக்கோட்டை தாலுகாவில், தமிழக முதல்வர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டி, கோவில்கள், மசூதி, தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மத்திகிரி ஹஸ்ரத் முஸ்ரிம் ஷாவலி காதரி தர்காவில், நேற்ற சிறப்பு தொழுகை நடந்தது. இதில், தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணாரெட்டி, முன்னாள் சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் மது என்ற ஹேம்நாத், ஓசூர் நகர அ.தி.மு.க., செயலாளர் பால் நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.