உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காஞ்சி வரதராஜ பெருமாள் ரத்தின அங்கி அலங்காரம்

காஞ்சி வரதராஜ பெருமாள் ரத்தின அங்கி அலங்காரம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில் தாததேசிகன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு பெருமாள் நேற்று, ரத்தின அங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோவிலில் முன்னொரு காலத்தில் தாசதேசிகன் என்பவர் சேவை செய்து வந்துள்ளார். அவரது ஜெயந்தி விழா ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் அனுசம் நட்சத்திரத்தில் நடப்பது வழக்கம். இதை முன்னிட்டு, கடந்த, 10 நாட்களாக தேசிகன் சன்னிதியில் சிறப்பு வழிபாடு நடந்து வந்தது. நேற்று நிறைவு நாளில் வரதராஜப்பெருமாள் ரத்தின அங்கி அலங்காரத்தில் மலையில் இருந்து இறங்கி, ஆழ்வார் பிரகாரம் வழியாக, தேசிகன் சன்னிதியில் எழுந்தருளினார். பெருந்தேவி தாயார், கல் கிரீடம் அணிந்து காட்சியளித்தார். ஆண்டுக்கு ஒரு முறை தாயார் கல் கிரீடம் அணிந்து காட்சியளிப்பது நேற்று மட்டுமே. பெருமாளுக்கு ரத்தி-ன அங்கி சேவை ஆண்டுக்கு இருமுறை நடக்கும். வைகுண்ட ஏகாதேசி அன்றும் தாத தேசிகன் ஜெயந்தி விழா அன்றும் காட்சியளிக்கிறார். நேற்று மாலை பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் திருவடி கோவில் வரை சென்று வந்ததார். இதை தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு மேல் தேசிகன் சன்னிதியில் வேத சாற்றுமறை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !