பத்மநாபசாமி கோவிலில் பெண்களுக்கு தளர்த்தப்பட்டது ஆடை கட்டுப்பாடு
திருவனந்தபுரம், கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகரில் பத்மநாபசாமி கோவில் உள்ளது. இங்கு பெண்கள் சாமி தரிசனம் செய்வதற்கு முன்பு ஆடை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. அதாவது சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற ஆடைகளை அணிந்து வரும் பெண்கள் அதன் மீது கேரள பாரம்பரிய முறைப்படி வேட்டிகட்டிக்கொண்டால் தான் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்ய முடியும்.இந்த கட்டுப்பாட்டை பத்மநாபசாமி கோவில் நிர்வாகம் நேற்று முதல் (29-11-16) தளர்த்திக்கொண்டு உள்ளது.
ஆடை கட்டுப்பாடு தளர்வு: இதுபற்றி கோவிலின் நிர்வாக அதிகாரி கே.என்.சதீஷ் நிருபர்களிடம் கூறுகையில், நேற்று மாலை முதல் பத்மநாபசாமி கோவிலுக்கு வரும் பெண் பக்தர்கள் சல்வார் கமீஸ், சுடிதார் ஆகிய ஆடைகளை அணிந்து சாமி தரிசனம் செய்ய அனுமதிப்பது என்று முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. ஏராளமான பெண் பக்தர்களிடம் இருந்து வந்த இ-மெயில்கள் மற்றும் வேண்டுகோள்களின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது என்றார். இந்நிலையில் கோவிலின் தந்திரி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.