திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.16 லட்சம் வசூல்
                              ADDED :3256 days ago 
                            
                          
                           திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் இடங்களில் வாடகைக்கு குடியிருப்போரில் பலர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாக்கி வைத்திருந்தனர். கோயில் துணை கமிஷனர் செல்லத்துரை 2014ல் பொறுப்பேற்றபோது, மனை வாடகை பாக்கி 36 லட்சம் ரூபாய்க்கு மேல் நிலுவையில் இருந்தது. இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் உத்தரவுபடி, நேற்று வரை 16 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.