அப்பம், அரவணை, நெய் அபிஷேக டிக்கெட் தனலட்சுமி வங்கிகளில் வினியோகம்
ADDED :3415 days ago
சபரிமலை: பக்தர்கள் வசதிக்காக அப்பம், அரவணை மற்றும் நெய் அபிஷேக டிக்கெட்கள் தனலட்சுமி வங்கி கிளைகளில் கிடைகும். சபரிமலை பயணத்தில் பக்தர்களின் முக்கிய வழிபாடு நெய் அபிஷேகம். ஒரு முத்திரை தேங்காயில் கொண்டு வரும் நெய் அபிஷேகம் செய்ய பத்து ரூபாய் கட்டணம். இதற்கான டிக்கெட் பம்பை மற்றும் சன்னிதானத்தில் தேவசம்போர்டு கவுன்டர்களில் வழங்கப்பட்டு வருவதுடன், தனலட்சுமி வங்கி கிளைகளிலும் கிடைக்கிறது.இதுபோல அரவணை, அப்பம் டிக்கெட்களும் இந்த வங்கிகளில் கிடைக்கும். ஒரு டின் அரவணை 80 ரூபாய். ஒரு பாக்கெட் அப்பம் 35 ரூபாய். வங்கி கிளைகளில் இருந்து டிக்கெட் வாங்கி வந்து விட்டால் சன்னிதானத்தில், இதற்காக சிறப்பு கவுன்டர் செயல்படுகிறது. இதன் மூலம் பக்தர்கள் நெரிசல் இல்லாமல் பிரசாதம் பெற்று செல்ல முடியும்.