புலியூர் ஆஞ்சநேயர் கோவில் வடை மாலை சாற்றி வழிபாடு
ADDED :3258 days ago
பள்ளப்பாளையம்: புலியூர் அடுத்த பள்ளப்பாளையத்தில் உள்ள வீரஆத்மநேச ஆஞ்சநேயர் கோவிலில் 1,008 வடை மாலை சாற்றி வழிபாடு நடந்தது. கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு இக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. வீரஆத்மநேச ஆஞ்சநேயருக்கு சந்தனம், பஞ்சாமிர்தம், மஞ்சள், விபூதி மற்றும் மங்களப்பொருட்களால் அபி?ஷகம் செய்யப்பட்டது. அதன்பின் புஷ்பவாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு, சுவாமி சேவை சாதித்தார். இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை வழிபட்டனர். இதேபோல், பல்வேறு ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.