உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தளிநாதர் கோயில் சம்பக சஷ்டி விழா துவக்கம்

திருத்தளிநாதர் கோயில் சம்பக சஷ்டி விழா துவக்கம்

திருப்புத்துார், திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில் யோக பைரவர் சன்னதியில் சம்பக சஷ்டி மகா உற்சவம் துவங்கியது.நேற்று காலை 9 மணிக்கு பைரவர் சன்னதி முன்பாக யாக மண்டபத்தில் சிவாச்சாரியர்களால் அஷ்ட பைரவர் யாகம் துவங்கியது.தொடர்ந்து பூர்ணாகுதி நடந்தது. பின்னர் யாகசாலையிலிருந்து புனித நீர் கலசங்கள் எடுத்து செல்லப்பட்டு பைரவருக்கு அபிஷேக, ஆராதனை நடந்தது. தொடர்ந்து விபூதிக்காப்பு அணிந்து வெள்ளிக்கவசத்தில் மூலவர் பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.தொடர்ந்து மாலையிலும் அஷ்ட பைரவர் யாகம் நடந்து அபிஷேக, ஆராதனை நடந்தது.தினசரி காலை,மாலை இருவேளைகளில் டிச.,5ம் வரை யாகம் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !