திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் சம்பக சஷ்டி விழா
ADDED :3258 days ago
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில் யோகபைரவர் சன்னதியில் சம்பக சஷ்டி மகா உற்சவம் துவங்கியது. நேற்று காலை 9 மணிக்கு பைரவர் சன்னதி முன், யாக மண்டபத்தில் அஷ்ட பைரவர் யாகம், பூர்ணாகுதி நடந்தன. யாகசாலையில் இருந்து புனித நீர் கலசங்கள் எடுத்து செல்லப்பட்டு பைரவருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து விபூதிக்காப்பு அணிந்து வெள்ளிக்கவசத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை அஷ்ட பைரவர் யாகம் நடந்தது. இந்த யாகம் டிச., 5 வரை காலை, மாலை நடக்கும்.