ஆலடி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்
ADDED :3329 days ago
வாலாஜாபாத்: வாலாஜாபாத் போஜகார வீதியில், ஆலடி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. துவங்க நாளான, 29ம் தேதி, கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகம் துவங்கியது. 30ம் தேதி, இரண்டாம் கட்ட பூஜை மற்றும் அதே நாளில் மாலை மூன்றாம் கட்ட பூஜைகள் நடந்தன. நேற்று காலை நான்காம் கட்ட பூஜையும், அதை தொடர்ந்து, 9:06 மணியளவில், விநாயகர் கோவில் கோபுரங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீரை ஊற்றி, துாப தீப ஆராதனை செய்து, கும்பாபிஷேகம் நடந்தது. அதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.