சபரிமலைக்கு நெய்த் தேங்காய் எதற்காக?
ADDED :3329 days ago
தேங்காய் என்பது நம் உடம்பு, நெய் என்பது நம் ஆத்மா. தேங்காயில் நெய் நிரப்பி இருமுடியில் வைத்து, படியேறி பகவானை தரிசனம் செய்து, பின்னர் நம் குருசுவாமியின் கையால் அந்த தேங்காயை உடைத்து நெய் அபிஷேகம் செய்யும்போது, நாம் பரமாத்மாவை நோக்கி ஒரு படி மேல் நோக்கி செல்கிறோம். இதுதான் நெய்த் தேங்காயின் தத்துவம்.