உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்

அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம்

திருவண்ணாமலை: அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

“அண்ணாமலையாருக்கு அரோகரா’ என  பக்தி கோஷத்துடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. டிசம்பர் 2, காலை சிவாச்சாரியார்கள் கோவிலில் 62 அடி உயரம் உள்ள தங்க கொடிமரத்தின் முன் வேதமந்திரங்கள் முழங்க, ஓதுவார்கள் திருமுறை இசைக்க, மேளதாளம் முழங்க, பக்தர்கள் பக்தி கோஷமிட கொடியேற்றப்பட்டது. இதில் உண்ணாமுலையம்மன் சமேதரராய் அண்ணாமலையார், மற்றும் பாரசக்தியம்மன் தங்க கொடிமரத்தின் முன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !