தை அமாவாசையை முன்னிட்டு தேவிபட்டினம் நவபாஷாணத்தில் ஏற்பாடுகள்
தேவிபட்டினம்: தை அமாவாசையை முன்னிட்டு நவபாஷாணத்தில் பக்தர்களுக்கான வசதிகளை நவபாஷாண அதிகாரிகள் மேம்படுத்தி வருகின்றனர்.
தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நபபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு ஆடி, தை அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து புனித நீராடுவதற்காக பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், நாளை (ஜன.,18) தை அமாவாசையில் பல ஆயிரம் பக்தர்கள் வருவார்கள். பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக நவபாஷாண கடற்கரை பகுதியில் இருந்து, கடலுக்குள் உள்ள நவக்கிரகம் வரை பக்தர்கள் உள்ளே செல்வதற்கும் வெளியேறுவதற்குமான தனித்தனி வழிகளை ஏற்படுத்துவதற்காக கம்புகள் மூலம் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பக்தர்களுக்கான பாதுகாப்பு வசதிகளை ஹிந்து சமய அற நிலையத்துறை சிவகங்கை இணை ஆணையர் பாரதி, ராமநாதபுரம் உதவி ஆணையர் ஞானசேகரன், செயல் அலுவலர் மாரிமுத்து, அறங்காவலர் குழு தலைவர் திருமாறன், எழுத்தர் தங்கவேல் பாண்டியன் ஆகியோர் செய்து வருகின்றனர்.