உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஓங்காளியம்மன் கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம்

ஓங்காளியம்மன் கோவிலில் தீர்த்தக்குட ஊர்வலம் கோலாகலம்

ஓமலூர்: பல்பாக்கி ஓங்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் முன்னிட்டு, நேற்று, ஆயிரக்கணக்கான பக்தர்கள், தீர்த்தக்குடம் எடுத்து சென்றனர். ஓமலூர் அருகே, பல்பாக்கியில், அரசுக்கு சொந்தமான, பழமையான செல்வகணபதி, ஓங்காளியம்மன், மகா மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு, மக்கள் சேர்ந்து, ஆலய விமான கோபுரம், கருவறை, மஹா மண்டபம், விநாயகர் சிலை மற்றும் பரிவார தெய்வங்கள் ஆகியவற்றை, ஆகம விதிப்படி கட்டியுள்ளனர். அங்கு, நாளை காலை, 9:00 முதல், 10:00 மணிக்குள், கும்பாபிஷேகம் நடக்கிறது.
அதையொட்டி, டிச.,2 மதியம், 3:00 மணியளவில், ஓமலூர் சந்தை அருகே, காசிவிஸ்வநாதர் கோவிலில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள், தீர்த்தக்குடம் எடுத்துச்சென்றனர். கோபுர கலசம், அலங்கரிக்கப்பட்ட குதிரை, கரகாட்டம், கோலாட்டம், கேரள செண்டை மேளத்துடன், ஊர்வலம், செவ்வாய் சந்தை, தாலுகா அலுவலகம், பஸ் ஸ்டாண்ட், தர்மபுரி பிரதான சாலை
வழியாக, கோவிலை வந்தடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !