உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி ஆண்டவர் கோவிலில் டிச.,4 மஹா கும்பாபிஷேகம்

பழநி ஆண்டவர் கோவிலில் டிச.,4 மஹா கும்பாபிஷேகம்

சங்ககிரி: செங்காட்டனூர், பழநியாண்டவர் கோவிலில், டிச.,4 மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது.

சங்ககிரி அருகே, சின்னாக்கவுண்டனூர், செங்காட்டனூரில் உள்ள பழநி ஆண்டவர் கோவிலில், சின்ன விநாயகர், பழநி ஆண்டவர், அரசு வேம்பு மரத்தடி விநாயகர், சின்னமாரியம்மன் மற்றும் வீட்டுச்சாமி உள்ளிட்ட சுவாமிகளுக்கு, மஹா கும்பாபிஷேகம், டிச.,4 காலை நடக்கிறது. அதையொட்டி, நேற்று காலை, 6:00 மணிக்கு மேல், மஹா கணபதி வழிபாடு, காப்பு கட்டுதல், மாலை, 5:00 மணிக்கு, முதல் கால வேள்வி பூஜை நடந்தது. இன்று காலை, 7:00 மணிக்கு இரண்டாம் கால யாக வேள்வி, மாலை, 6:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை நடக்கிறது. டிச.,4 அதிகாலை, 5:00 மணிக்கு நான்காம் கால வேள்வி பூஜை, காலை, 8:00 மணிக்கு மேல், 9:00 மணிக்குள் மஹா கும்பாபிஷேகம், தீபாராதனை மற்றும் அன்னதானம் நடக்கும். காலை, 10:30க்கு மேல், அரசு, வேம்பு திருக்கல்யாணம் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !